வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

வாட்ஸ்அப் தளத்தில் பயனர்களை பிளாக் செய்வதற்கான பிளாக்கிங் சேவை இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, பிளாக் சேவையைப் பயன்படுத்தி ஒருவரை பிளாக் செய்துவிட்டால் அந்த நபரிடம் இருந்து வரும் அனைத்து மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகள் பிளாக் செய்யப்படும்.

உங்கள் நண்பரோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர் யாரேனும் உங்களை பிளாக் செய்துவிட்டால், உங்களுக்கு வாட்ஸ்அப்-பிற்கு எந்தவித பிளாக்கிங் நோட்டிபிகேஷனும் அனுப்பபடமாட்டாது. நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை நேரடியாக அறிய முடியாது என்றாலும் கூட, சில செயல்முறைகளின் படி நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

பிளாக் செய்யப்பட்டுள்ளதை எப்படி உறுதிப்படுத்துவது?
1. ப்ரொஃபைல் பிக்சர்

நீங்கள் ஒருவரால் பிளாக் செய்யப்பட்டிருந்தால் ஒன்று அவர்களுடைய ப்ரொஃபைல் பிக்சர் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது அல்லது அவர்களின் ப்ரொஃபைல் பிக்சரில் அவர்கள் மாற்றம் செய்தாலும் கூட உங்களுக்குப் பழைய ப்ரொஃபைல் பிக்சர் மட்டுமே காண்பிக்கப்படும். இப்படி ஏதேனும் நடந்தால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

2. லாஸ்ட் சீன் நேரம்

உங்களை யாரேனும் பிளாக் செய்திருந்தால், அந்த நபரின் லாஸ்ட் சீன் நேரம் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது. இதை மட்டும் வைத்து நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று தீர்மானித்து விட முடியாது, ஏனென்றால் வாட்ஸ்அப் தளத்தில் லாஸ்ட் சீன் நேரத்தை ஹைடு செய்வதற்கான அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொஃபைல் பிக்சர் மற்றும் லாஸ்ட் சீன் இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்.

3. மெசேஜ் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம்

உங்களை இவர் பிளாக் செய்துள்ளார் என்று சந்தேகிக்கும் நபருக்கு ஒரு மெசேஜ்-ஐ அனுப்புங்கள், நீண்ட காலத்திற்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ் ஒரே ஒரு டிக் மார்க்குடன் மட்டும் இருந்தால், உங்கள் மெசேஜ் அந்த நபருக்கு டெலிவரி ஆகவில்லை என்பது பொருள். இதற்கான முக்கிய காரணம் ஒன்று நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அந்நபரின் மொபைல் டேட்டா ஆன்னில் இல்லாமல் இருக்கலாம்.

4. வாய்ஸ் கால் செய்யுங்கள்

இன்னும் உங்களால் அந்த நபர் உங்களை பிளாக் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையா? அப்போது உடனே அவர்களின் எண்ணிற்கு வாட்ஸ்அப் இல் ஒரு வாய்ஸ் கால் செய்யுங்கள். நீங்கள் வாய்ஸ் கால் செய்து உங்களுக்கு ரிங்டோன் கேட்டால், நீங்கள் பிளாக் செய்யப்படவில்லை என்று அர்த்தம். அதற்குப் பதிலாக வாய்ஸ் கால் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது உறுதி.

5. கிரியேட் நியூ குரூப்

ஒரு புதிய குரூப் ஒன்றை உருவாக்குங்கள், அதில் அந்த நபரை ஆட்(add) செய்ய முயற்சியுங்கள். உங்களால் அந்த நபரை நீங்கள் உருவாக்கிய புதிய குரூப்பில் ஆட் செய்ய முடிந்தால் நீங்கள் இன்னும் பிளாக் செய்யப்படவில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்படி அவர்களை புதிய குரூப்பில் ஆட் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால், நிச்சயமாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த செயல்முறைகளைப் பின்பற்றி, உங்களுக்குத் தெரிந்த நபர்களால் நீங்கள் வாட்ஸ்அப் இல் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த 5 முறைகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போனாலோ அல்லது அனைத்தும் ஒத்துப்போனாலோ நீங்கள் நிச்சயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதே உண்மை.