2019ல் இந்தியர்கள் எதையெல்லாம் அதிகம் தேடினார்கள்.. டாப் 10 லிஸ்ட் இதுதான்.. வெளியிட்டது கூகுள்

கூகுள் இந்தியா’ இன்று தனது 2019 ஆம் ஆண்டுக்கான மிகவும் தேடப்பட்ட டாபிக் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் ஒட்டுமொத்தமாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட அம்சமாகும். அதைத் தொடர்ந்து ‘மக்களவைத் தேர்தல்’, ‘சந்திரயான் 2’, ‘கபீர் சிங்’ மற்றும் ‘அவென்ஜர்: எண்ட்கேம்’ போன்றவை முக்கிய இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம் போல ஒரு உணர்ச்சிமிக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவேதான் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்பாக லோக்சபா தேர்தலை விட அதிகமானோர், கூகுளில் தேடி உள்ளனர் என்கிறது அந்த புள்ளிவிபரம்.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் இந்த வருடம் நடைபெற்றது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்ற போதிலும் கூட, கூகுளில் அது தான் முதலிடம் பிடித்துள்ளது. அணிகளின் ஸ்கோர்களை, தெரிந்து கொள்ளவும், கிரிக்கெட் அட்டவணை குறித்து அறிந்து கொள்ளவும், கிரிக்கெட் தொடர்பான பேட்டிகளை படிக்கவும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

கூகுள் தேடுதலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது இந்திய லோக்சபா தேர்தல். ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஏழு கட்ட தேர்தலாக இது நடைபெற்றது.

சந்திரயான் 2
கூகுளில் அதிகம் பேர் தேடிய விவகாரங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது சந்திரயான்-2. விக்ரம் லேண்டர் மூலமாக நிலவை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டது சந்திரயான்-2. ஆனால் இந்த திட்டம் பாதிதான் வெற்றிபெற்றது. விக்ரம் லேண்டர் செயல்படவில்லை. எனவே இது தொடர்பான அப்டேட் களுக்காக கூகுளில் அவ்வப்போது தேடியுள்ளனர் நெட்டிசன்கள்.

கபீர் சிங்
ஷாஹித் கபூர் நடித்த கபீர்சிங் என்ற ஹிந்தி திரைப்படம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. விமர்சனத்திற்கு உள்ளான திரைப்படம் என்பதால் இது தொடர்பான தகவல்களுக்காக அதிகம் பேரை நாடி உள்ளனர்.

அவென்ஜர்: எண்ட்கேம்
பட்டியலில் அடுத்த இடம் அவென்ஜர்: எண்ட்கேம்’ . அயர்ன்மேனுக்கு என்ன ஆனது என்பது பலரது மனதில் இருந்து கேள்வி. ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. உலகளாவிய அளவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் ஒன்றாக இது மாறியது. இந்தியாவின் இணையதளத்திலும் இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்துள்ளனர் என்பது கூகுள் தேடுதலில் இருந்து தெளிவாகிறது.

சட்டப்பிரிவு 370
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370 மத்திய அரசால் நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகம் பேர் தேடி படித்துள்ளனர்.

நீட் ரிசல்ட்
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தொடர்பான முடிவுகளை அதிகம் பேர் தேடியுள்ளனர். நாடு முழுக்கவும் தற்போது மருத்துவ கல்லூரி இடங்களுக்கு நீட் என்ற ஒரே தேர்வு தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தேடுதல் என்பதும் அதிகமாக இருந்துள்ளது.

ஜோக்கர்
மற்றொரு திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதுவும் ஹாலிவுட் சினிமா தான். படத்தின் பெயர் ஜோக்கர். ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ளது இந்த திரைப்படம்.

பெண் சூப்பர் ஹீரோ
கேப்டன் மார்வெல் எஸ் எஸ் மைன் (captain-marvel-ss-main) என்ற பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம், இந்த வருடம் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் சுமார் 70 கோடிக்கும் மேல் இந்த திரைப்படம் வசூல் செய்து இருந்தது.

பிரதமர் கிஷான் யோஜனா
பட்டியலில் அடுத்த இடம் ‘பிரதம மந்திரியின் கிசான் யோஜனா’ PM Kisan Yojana என்ற திட்டம் தொடர்பானது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்படும். இது தொடர்பாகவும் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.