கூகுள்.. ஆல்பபெட் சிஇஒ.. சுந்தர் பிச்சைக்கு 2020ம் ஆண்டில் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அதன்பிறகு கூகுள் நிறுவனத்திற்கு தலைமை நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ள ஆல்பபெட்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு மாத சம்பளமாக ரூ.1.16 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் உலகின் முதன்மை தேடு பொறியான கூகுள் நிறுவனத்தின் சிஇஒவாக இருந்தார்,

இப்போது புதிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டு சுந்தர் பிச்சை ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருறிது.

சுந்தர் பிச்சைக்கு சராசரியாக மாதம் 1.16 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இது தவிர இதர படிகள், பங்குத்தொகைகள் போனஸ் உள்ளிட்டவை தனி. கடந்த இரண்டு நாளுக்கு முன் பங்குத்தொகையாக அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து ரூ.638 கோடி கிடைத்தது.