டிக்டாக் நிறுவனத்தின் மற்றுமொரு அட்டகாசமான செயலி: ரெஸ்சோ.!

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் டிக்டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ரெஸ்சோ என்ற பெயரில் இசை பிரயர்களுக்காக இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. தற்போது இந்தியாவில் 27ஆயிரத்திற்கு அதிகமானோர் ரெஸ்சோவை தரவிறக்கும் செய்துள்ளனர். பீட்டா வெர்ஷனாக உள்ள ரெஸ்சோ, பல வகையான பாட்ல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது.

குறிப்பாக பயனாளர்கள் பாடல்களுக்கு கீழே கமெண்ட் செய்யும் வசதி டிக் டாக் மாதிரி குறைந்த நொடி வீடியோக்களை ஜிஃப் வசதிகள் உள்ளிட்டவை ரெஸ்நோ செயலியில் உள்ளன.

மேலும் இந்தியாவில் சோதனை முறையில் உள்ள ரெஸ்சோ இந்தோனேஷியாவிலும் அறிமுகமாகவுள்ளது. பின்பு இணையப்பயன்பாட்டில் இந்தியா, இந்தோனேஷியா நாட்டு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் இந்த இரு நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளதாக பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.