30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா?

தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பிரபலமானவர் தான் நடினை தமன்னா. நடிகைகளிலேயே பால் போன்ற நிறத்தைக் கொண்டவர் என்று இவரைக் கூறினாலும் மிகையாகாது. தமன்னா ஆரம்ப காலத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். இவர் நிறத்திற்கு மட்டுமின்றி, அழகான உடலமைப்பைக் கொண்டவரும் கூட. இவரைக் குண்டாக யாருமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவில் இவர் தனது உடலமைப்பை சிக்கென்று பராமரித்து வருகிறார்.

நடிகை தமன்னா எப்போதும் பிரஷ்ஷாக காணப்படுவதோடு, சுறுசுறுப்பாகவும் இருப்பார். இதற்கு அவரது வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம் என்று பேட்டி ஒன்றிலும் அவர் கூறியுள்ளார். மேலும் இவருக்கு ஹோட்டல் உணவுகளை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் பிடிக்குமாம். அதோடு இவர் வீட்டு உணவுகளை நன்கு வயிறு நிறைய சாப்பிடக்கூடியவர். ஒருவேளை அதிகமான கலோரிகளை எடுத்துவிட்டால், அதற்கு ஏற்ப ஜிம்மில் உடற்பயிற்சிகளை சற்று அதிகமாக செய்வாராம்.

இப்படிட்டவர் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நாளில் நடிகை தமன்னாவின் டயட் திட்டம், உடற்பயிற்சி வழக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

நடிகை தமன்னா எப்போதும் சிம்பிளான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தான் உண்பாராம். இவரது டயட் சார்ட்டானது பிரபல ஊட்டச்சத்து நிபுணரான பூஜா மகிஜாவினால் தயாரிக்கப்பட்டது. இவர் ஃபிட்டாக இருப்பதற்காக தனக்கான டயட்டை கண்டிப்பாக பின்பற்றுவாராம். உதாரணமாக,

அதிகாலை
ஒரு டம்ளர் தேன் சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் மற்றும் 6 நீரில் ஊற வைத்த பாதாம்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேன் கலந்து குடிப்பதால், உடலில் இருந்து டாக்ஸின்கள் நீங்கும். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள அழற்சிகளைக் குறைக்க உதவும்.

காலை உணவு
இட்லி/தோசை/ஓட்மீல்

தமன்னா காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை விரும்புகிறார். எனவே, இட்லி அல்லது தோசை சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். இதை சட்னி அல்லது சாம்பருடன் எடுத்துக் கொள்ளப்படுவது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஓட்ஸ் உணவு நார்ச்சத்து நிறைந்ததாகும். இது உடலில் கொழுப்பு உறிஞ்சுவதைத் தடுக்கிறது மற்றும் மனநிறைவை அதிகரிக்கிறது.

ஒரு கப் சாதம், 1 கப் தால் மற்றும் காய்கறிகள்

காய்கறிகள் மற்றும் பருப்புடன் வெள்ளை அரிசி அல்லது பழுப்பு அரிசி சரியான அளவு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு சீரான உணவு.

முட்டையின் வெள்ளைக்கருக்கள்/சிக்கன், காய்கறிகள்/சாஹி பாஜி

இரவு உணவிற்கு தமன்னா புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புகிறார். இது அவரது மெட்டபாலிசத்திற்கு ஊக்கத்தை அளிக்க உதவுகிறது.

தமன்னாவின் எடை இழப்பு விதிகள்
* தமன்னா ஒவ்வொரு 2 முதல் 3 மணிநேரத்திற்கும் ஒருமுறை ஏதாவது உண்பாராம். இது அவரது மெட்டபாலிசத்தை ஆக்டிவ்வாக வைத்திருக்க உதவுகிறது.

* தினமும் குறைந்தது 3 லிட்டர் நீரை தவறாமல் குடிப்பாராம்.

* தமன்னா எப்போதும் நற்பதமான பழச்சாறுகள் மற்றும் இளநீரைத் தான் குடிப்பாராம்.

* தமன்னாவிற்கு யோகர்ட்டை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட விரும்புவாராம். இது அவரது செரிமான செயல்பாட்டை சீராக செயல்பட உதவுகிறது.

* தமன்னாசிற்கு பாஸ்தா, சாக்லேட், சாதம் போன்றவற்றை சாப்பிட பிடிக்குமாம். ஆனால் அவர் இவற்றை மிதமான அளவில் தான் உண்பாராம்.

* தமன்னா பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட முயற்சிப்பாராம். முடியாத பட்சத்தில் தான் ஹோட்டலில் சாப்பிடுவாராம்.

* தமன்னா இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பாராம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா தனது ஃபிட்னஸ் குறித்து கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை ஃபிட்னஸ் என்பது அன்றாடம் தவறாமல் பற்களைத் துலக்குவது போல, அன்றாடம் உடற்பயிற்சியையும் அவசியம் செய்ய வேண்டும். இதனால் உடல் ஃபிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கீழே தமன்னாவின் ஒர்க்-அவுட் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் அவரது அழகான உடலமைப்பைப் பராமரிக்க உதவுகிறது.

தமன்னாவின் ஒர்க்அவுட் திட்டம்
செயல்பாட்டு பயிற்சி ( Functional training)

தமன்னா செயல்பாட்டு பயிற்சிகளை செய்வதால் , இது அவரது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு, சமநிலை, ஸ்திரத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் வலிமையையும் அதிகரிக்கிறது.

கார்டியோ உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. எனவே இவர் அதிகமாக ஒருவேளை உட்கொண்டாலும், கார்டியோவை செய்வதன் மூலம், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு எரிக்கப்படுகிறது.

தமன்னா எடை பயிற்சியையும் அன்றாடம் செய்வாராம். இதனால் அவரது தசையின் சக்தி அதிகரிப்பதோடு, சகிப்புத்தன்மை மற்றும் தசையின் வலிமையும் மேம்படுகிறது.

ஒருவேளை தமன்னாவால் ஜிம் செல்ல முடியாவிட்டால், அவர் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வாராம். இது ஒட்டுமொத்த உடலுக்கும் ஒரு நல்ல பயிற்சியையும் அளிக்கும்.

தமன்னாவிற்கு யோகாவின் மீதும் நம்பிக்கை உள்ளது. இது அவரது மனதை சுத்தப்படுத்தி, நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதற்கு உதவுகிறதாம். இதனால் அன்றாடம் சிறிது நேரம் யோகாவை மேற்கொள்வாராம்.