முள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. ப ர ப ர க்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் ச ல ச ல ப் பு

மதுரை மாவட்டம் சிவகங்கையில் பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் தவம் செய்யும் காட்சியை தரிசனம் செய்து பக்தர்கள் அருளாசி பெற்று வருகின்றனர்.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதனால் உடை முள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகையான முட்கள் சேகரிக்கப்பட்டு 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது.

இந்த முள்படுக்கையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புண்ணிய தீர்த்தம் தெளிப்பர். அதன் பின்னர் நாராராணி அம்மையார் தவம் செய்து அருள்வாக்கு கூறுவார்.

அப்போது பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மையை போக்குதல் உள்ளிட்ட வரம் வேண்டுவர். அவர்களுக்கு அந்த பெண் சாமியார் ஆசி வழங்கினார்.