எ ச் ச ரி க் கை! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்…!

பெரும்பாலான மக்கள் பேய்களை நம்புவதில்லை, அது மூ ட ந ம்பிக்கை என்றே கருதுகிறார்கள். ஆனால் இரவில் தனியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் மனதின் ஏதோவொரு மூலையில் பேய்கள் மீதான அச்சம் இருப்பதுதான். ஆனால் நம்மை சுற்றி பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அமானுஷ்ய நிகழ்வுகளை சந்தித்ததாக பலரும் தங்களின் சொந்த அனுபவங்களை கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். நாம் ஒரு விஷயத்தை பார்க்கவில்லை என்பதற்காக அது இல்லை என்று ஆகிவிடாது, கடவுளும் சரி, பேயும் சரி இரண்டுமே இதேபோலத்தான். நிஜமான ஆன்மாக்கள் அல்லது பேய் இருக்கும் வீடுகள் பேய் படங்களில் காட்டப்படும் வீடுகள் போல இருக்காது. ஆனால் அந்த வீடுகளில் நிச்சயம் சில வித்தியாசங்கள் இருக்கும். ஒரு வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் ஒரு வீட்டில் பேய் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

திடீர் வெப்பநிலை மாற்றம்
உங்கள் வீட்டில் உண்மையாகவே பேய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் உங்கள் வீட்டின் வெப்பநிலை அல்லது நீங்கள் சந்தேகிக்கும் அறையின் வெப்பநிலையில் கவனம் செலுத்த வேண்டும். எந்த காரணமும் இன்றி திடீரென உங்கள் வீட்டில் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டால் உங்கள் வீட்டில் ஆவிகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு இடத்திற்குள் அவை நுழைந்து விட்டால் அவை அங்கு வசிக்க சில ஆற்றல் தேவை, குறிப்பாக வெப்பம். இதனால் அறை அல்லது வீட்டின் வெப்பநிலை திடீரென குறையும். வீட்டின் குளிரான இடங்கள் பொதுவாக ஆவிகள் வாழ வசதியான இடமாக கருதப்படுகிறது. நீங்கள் இருக்கும் அறையில் ஏசி அல்லது மின்விசிறி இல்லாதபோதும் திடீரென வெப்பநிலை குறைந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

விவரிக்க முடியாத குரல்கள் மற்றும் வாசனைகள்
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு சென்றால் அங்கு ஒரு இடத்தில் மட்டும் கடுமையான வாசனை இருந்தால் அங்கு ஆன்மாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. அங்கு யாரும் வசிக்காமல் இருந்ததாலோ அல்லது தூய்மை இல்லாமல் இருந்ததாலோ சில வாசனைகள் ஏற்படலாம். ஆனால் ஆனால் சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் நீடிக்கும் சில விசித்திரமான வாசனையையோ அல்லது அசாதாரண நறுமணத்தையோ நீங்கள் உணர்ந்தால் நீங்கள் அந்த வீட்டில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மலர், புகையிலை, வாசனை திரவியங்கள் போன்ற வாசனையை நீங்கள் உணரலாம். இது உங்கள் வீட்டில் பேய் இருப்பதற்கான முக்கியமான அறிகுறி ஆகும்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் குறைபாடுகள்
சில நேரங்களில் உங்கள் கடிகாரம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திடீரென நிறுத்தப்படுவதை நீங்கள் காணலாம் அல்லது உங்கள் தொலைக்காட்சி சரியாக செயல்படாது. உங்கள் வீட்டின் மின்விளக்குகள் ஏற்ற இறக்கமாக எரிவது, தொலைக்காட்சி திடீரென இயங்குவது அல்லது இயங்காமல் போவது போன்ற செயல்பாடுகள் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அந்த குறைபாடுகளை நீங்கள் சரிசெய்ய முடியவில்லை என்றாலோ அல்லது சரிசெய்தும் மீண்டும் மீண்டும் தவறாக செயல்பட்டாலோ, விசித்திரமான குரல்கள் திடீரென கேட்பதோ உங்கள் வீட்டில் சில அமானுஷ்ய சக்திகள் இருப்பதன் அறிகுறி ஆகும்.

உயிரற்ற பொருட்களின் விசித்திரமான இயக்கம்
வீட்டில் யாரும் இல்லாதபோது கூட, உங்கள் படிக்கட்டுகளில் அல்லது உங்கள் வாழ்க்கை அறையில் அடிச்சுவடுகளைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது கடைசியாக நீங்கள் வைத்த இடத்தில் உங்கள் நாற்காலி இல்லை என்பதை நீங்கள் பார்த்தீர்களா? வெளிப்புற ஆற்றல் இல்லாமல் எந்தவொரு உயிரற்ற பொருளும் தானாக நகர வாய்ப்பில்லை. காகிதம் மற்றும் துணி போன்றவை காற்றின் மூலம் இடம் பெயரலாம். கனமான பொருள்கள், புத்தகம், சாவி, போட்டோ போன்றவை ஒவ்வொரு முறையும் அவை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாறி இருந்தால் உங்கள் வீட்டில் சில ஆவிகள் இருப்பது உறுதியாகும்.

செல்லப்பிராணிகளின் வித்தியாசமான நடத்தை
உங்களிடம் செல்ல நாய் அல்லது பூனை இருந்தால், அவர்களின் நடத்தையை நீங்கள் கவனிக்கலாம். உங்கள் நாய் ஒரு குறிப்பிட்ட திசையிலும், இல்லாத ஒரு பொருளைப் பார்த்து ஒரு வித்தியாசமான வழியில் குரைக்கிறதா? உங்கள் பூனை தொடர்ந்து இல்லாத ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா? உங்கள் செல்லப்பிராணிகள் அவர்கள் எப்போதும் நுழைந்து கொண்டிருக்கும் அறைக்குள் நுழைய மறுக்கிறார்களா? ஆம் என்றால், உங்கள் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகும். விலங்குகளின் ஒலி மற்றும் பார்வை அலைநீளம் மனிதர்களை விட வித்தியாசமாக இருப்பதால், அவை மனிதர்களால் பார்க்க முடியாத விஷயங்களைக் காணவும் கேட்கவும் முடிகிறது.

தொடர்ந்து கவனிக்கப்படுவது அல்லது தொடுவது போன்ற உணர்வு
யாராவது ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கும்போது அதனை நாம் உணரலாம். நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கும்போது, பார்க்கப்படுவது போன்ற ஒரு உணர்வு இருப்பது இயல்பானது, ஆனால் உங்கள் வீட்டில் யாரும் இல்லாதபோது யாரோ ஒருவர் கவனிக்கப்படுவதை நீங்கள் உணர்ந்தால் அது வித்தியாசமாகவும் பயமாகவும் இருக்கும். நீங்கள் வீட்டு வேலைகளில் பிஸியாக இருக்கும்போது அல்லது நீங்கள் தூங்கும்போது எந்த நேரத்திலும் இந்த உணர்வைப் பெறலாம். உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தாலும் யாராவது உங்கள் தோளைத் தொட்டது போல் நீங்கள் உணரலாம். சில நேரங்களில், யாரோ ஒருவர் உங்களை சொறிந்ததாக அல்லது உங்களை காயப்படுத்த முயற்சிப்பதாக நீங்கள் உணரலாம். இதெல்லாம் உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

குழந்தைகளின் நடத்தையில் மாற்றம்
உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கண்ணுக்கு தெரியாத அல்லது கற்பனையான ஒருவருடன் நட்பு வைத்திருப்பதாகத் தோன்றும்போது உங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும். ஒரு நண்பரைக் கண்டுபிடித்ததாக குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும் மற்றும் அவர்களுடன் பேசுவதை ரசிக்கும் திரைப்படங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். உங்கள் பிள்ளைகளின் நிலை இதுதான் என்றால், நீங்கள் ஒரு பேய் வீட்டில் வசிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். குழந்தைகள் பலவீனமானவர்கள் எனவே அவர்களுடன் தொடர்பு கொள்வது ஆவிகளுக்கு எளிதாக இருக்கும்