ஆஹா… ரவிவர்மா பெயின்டிங் போல அப்படியே சமந்தா… வைரலாகும் போட்டோ… அசத்தும் 12 நடிகைகள்

ரவிவர்மாவின் அழகிய பெயின்டிங் போல எடுக்கப்பட்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.

தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் இப்போது ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டார்.

இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் வி ழு ந்தார். சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் அவர் பிசியாக இருக்கிறார்.

இப்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். சர்வானந்த் ஹீரோ. த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இவர், புகழ்பெற்ற ரவிவர்மாவின் ஓவியங்களை போல எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் கலந்துகொண்டார். பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் காலண்டருக்காக இதை எடுத்துள்ளார்.

இதில் நடிகை சமந்தாவை அவர் எடுத்துள்ள புகைப்படம் அப்படியே அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கிறது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தாவை அடுத்து நடிகைகள் ஸ்ருதிஹாசன், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ஷோபனா உட்பட 12 பேர் இந்த காலண்டருக்காக ரவிவர்மா ஓவியம் போல போஸ் கொடுத்துள்ளனர்.

சுகாசினி மணிரத்னத்தின் நாம் அறக்கட்டளை தொடங்கி 10 வருடம் ஆனதையடுத்து, இந்த காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.