அதி உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் நடிகை தமன்னா , வெளியானது புதிய விடியோ

தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிப்பேனா என்கிற அளவிற்கு முதல் இரண்டு வருடங்கள் பெரும் போராட்டமாக இருந்தது என்று சொல்லும் தமன்னா அதன்பின்பு முதல் இடத்தையே பிடித்ததுதான் சாதனை. அழகு, கவர்ச்சி என்று இளமையை முதலில் முதலீட்டாக்கியவர்.

அதில் நல்ல அறுவடையைப் பார்த்ததும் பினனர் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க தான் மறைத்து வைத்திருந்த திறமைகளை ஒவவொன்றாக எடுத்துவிட்டார். இன்று வரை இவரது பாய்ச்சல் குறையவில்லை.

பாகுபலி முடிந்த பின் உங்கள் கல்யாணம் என்று சொல்லப்பட்டதே? எப்போது, யாருடன்? என்னோட படம் ரிலீஸ் ஆவதும் என் கல்யாணமும் ஒன்றா? அப்படி நான் சொல்லவில்லை. யாரோ கிளப்பிவிட்டிருப்பார்கள்.

கல்யாணம்ங்கிறது அழகான, இயற்கையான ஒரு விஷயம். அது எல்லோருடைய வாழ்க்கையில் வரக்கூடிய இனிய தருணம். ஆனால் அது இந்தப் படத்திற்குப் பின்பு நடக்கும் என்று நான் சொல்ல முடியாது.

அது இறைவன் போடும் முடிச்சு, இறைவன் சித்தப்படி நடக்கும்போது நடக்கட்டும் என்கிறார். ‘‘சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு. இரண்டையும் கலக்க கூடாது. படங்களில் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கிறதோ, அதன் தன்மைக்கு ஏற்ப நடிகைகள் உடைகளை அணிகிறார்கள்.

விருப்பப்பட்டு அதுபோன்ற உடைகளை அவர்கள் உடுத்துவது இல்லை. சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற ஆடைகளை குடும்பத்து பெண்கள் அணிய விரும்புவது நல்லது அல்ல.

நடிகைகள் யாரும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் சினிமாவில் உடுத்திய ஆடைகளை அணிவது இல்லை. சாதாரண குடும்ப பெண்கள் அணியும் ஆடைகளைத்தான் அணிகிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது சாதாரண பெண் மாதிரிதான் இருப்பேன்.

சினிமாவில் அணிவது போன்ற ஆடைகளை உடுத்துவது இல்லை. சினிமா உடைகளை அணிந்தால் வீட்டிலும் நடிக்கத்தான் வேண்டும். எனவே சினிமாவை சினிமா மாதிரி பாருங்கள்.

நிஜ வாழ்க்கைக்கு அதை கொண்டு வராதீர்கள். நடிகைகள் அணிவது போல் கவர்ச்சி ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் ஆசைப்படாதீர்கள்’’ என்று பொறுப்பாக பேசுகிறார் அம்மணி. சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இதில், 11th Hour வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்ன. ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லலர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் உடல் எடை கூடி போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி.