அதுல்யா ரவியின் முதல் இரவு நடந்தே தீர வேண்டும் – ரசிகர்கள் வாயை பிளக்க வைத்த அதுல்யா ரவி .!

அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. ஷாந்தனு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாக்யராஜூம் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தரண், ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் பட்ப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கணவன் மனைவியான ஷாந்தனு -அதுல்யா ரவியின் முதல் இரவு நடந்தே தீர வேண்டும் என்று ஊர்வசி திட்டவட்டமாக இருப்பதும் இன்று முதலிரவு நடக்கக்கூடாது என்று பாக்யராஜூம் கூறுகின்றனர்.

இடையிடையே அதுல்யா ரவியின் கவர்ச்சியான காட்சிகளும், யோகி பாபு, மனோபாலா, ரவீந்தர் சந்திரசேகரின் காமடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன

இறுதியாக இந்தப் படம் யூ சர்டிபிகேட்டா ஏ சர்டிபிகேட்டா என்று விழி பிதுங்கியுள்ளார் ஷாந்தனு.இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதுல்யா ரவியா இது என்று வாயை பிளந்துள்ளனர்.