ஜுலியின் கவர்ச்சி விடியோவுக்கு அசிங்க படுத்திய ரசிகர், பதிலடி கொடுத்த நடிகை. !

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரப்பெண்ணாக வீரத்தமிழச்சி என்று பெயர் வாங்கினார். இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார்.

நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களின் கிண்டலுக்கும் எங்கு சென்றாலும் நெகடிவ் கருத்துக்களை பெற்று வந்தார். இதை கண்டு கொள்ளாமல் தன் வேலை பார்த்து வரும் ஜூலி சமீபத்தில் போட்டோஹுட் பக்கம் திரும்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஜூலி சிகப்பு சேலையில் க்ளாமர் காட்டி வீடியோவை வெளியிட்டார். அதற்கு ரசிகர்கள் கிண்டலும் கேலியுமாக வெறுப்பேற்று கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அதில் ஒருவர் பாத்துகோங்க இதுதான் நம்மலோட முன்னாடி இருந்த வீர தமிழச்சி என்று கிண்டல் செய்துள்ளார்.

அதற்கு ஜூலி பதிலடி கொடுக்கும் வகையில் வீரம் ஆடையில் இல்ல ப்ரோ உங்கள மாதிரி கருத்துக்களை போடுறவங்கள 4 வருஷமா பேஸ் பண்ணி கெத்தா இருக்குறதுதான் வீரம் என்று கூறியுள்ளார். இதற்கு சிலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.