இவ்வளவு அழகா நயந்தாராவை பாத்திருக்க மாட்டீங்க.. அழகில் தூக்கி வாரி போடும் நயனின் படங்கள் .!

தென்னிந்திய திரையுலகில் தற்போது முடிசூடா ராணியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.

அவரது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா கெத்தாக அழைக்கப்படுவார். அத்துடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அண்ணாத்தே” படத்தில் நடிப்பதற்காக அவர் ஹைதராபாத் சென்றுள்ளார்.

மேலும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகின்ற ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விக்னேஷின் சிவனின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது.

ரஜினி படத்தில் உடன் பணிபுரிந்தவர்களுக்கு கொ..ரோ..னா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படம் மற்றும் தீவிரமாக பண்ணாமல் காதலையும் கொஞ்சம் அதிகமாகவே பண்ணுகிறாராம்

இந்த நிலையில், தற்போது அவர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கேரள மாடல் புடவை அணிந்து கொண்ட க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் நயன்தாரா கேரளா சேலையில் தலை நிறைய மல்லிப்பூ வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை நயன்தாரா மட்டும் தனியாக இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் எங்கே என்று கேட்டு வருகின்றனர்.