போலி கணக்குக்கு வாழ்த்து சொன்ன சமந்தா, இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லையென கை விரித்த பவித்ரா .!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி துவங்கி திருமணத்திற்கு பின்பும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து வருகிறார் சமந்தா.

சினிமாவை அடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் போட்டோஹுட் பற்றி பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் வேறொன்றுமில்லை நடிகை பவித்ரா தெறி படத்தில் நடித்த நடிகை சமந்தாவின் ஸ்டைலில் இருப்பது போன்று சேலை அணிந்து அப்பட்டமாக சமந்தாவை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால் அப்புகைப்படம் போலி கணக்கில் பதிவானதை பார்த்து சமந்தா வாழ்த்தியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இது போலி என்று கூறி கலாய்த்து வந்தனர்.

அதனால் உடனே சமந்தா அந்த பதிவினை டெலீட் செய்துள்ளார். இது பற்றி பவித்ரா கூறியது, இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதுபற்றி என்னை வாழ்த்தியதற்கு பெரிய மனம் வேண்டும் நன்றி சமந்தா என்று கூறி பதிலளித்துள்ளார் பவித்ரா.