காதலனை பிரிந்ததற்கு காரணம் இதுதான், முதல் முறையாக வாய் திறந்த அஞ்சலி

தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் அடுத்ததாக இவர் நடித்த திரைப்படம் தான் அங்காடித்தெரு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்துக் கட்டி விட்டது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் மவுசு வேறு.

இதை தொடர்ந்து மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு இணங்க நடிகை அஞ்சலி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டா தான். அந்த வகையில் கலகலப்பு, எங்கேயும் எப்போதும் ஆகிய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு நிலையில் நடிகை அஞ்சலி திடீரென சினிமாவை விட்டு விலகி விட்டு ஐதராபாத்தில் தங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்களாக நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்ததன் காரணமாக சரியான படவாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது.

ஆனால் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 2 திரைப்படத்தில் மட்டும் ஒரு குத்து டான்ஸ்க்கு கும்மாங்குத்து குத்தி விட்டார். இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் வளம் வர ஆசைப்படும் நமது நடிகை சமீபத்தில் இணையத்தில் மிக கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி தனது காதல் பற்றியும் காதல் தோல்வி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவியது. நான் காதலித்தவரின் சில குணங்கள் என்னை மிகவும் பாதித்தது. அதனால் தான் பிரிந்து விட்டேன். எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான்.

பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். என் அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன் இவ்வாறு நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.