பிரபல சீரியலுக்கு முழுக்கு போடும் விஜய் டிவி, ஏன்னு தெரியுமா ?

சமீபகாலமாக மற்ற சேனல்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க பல தாய்மார்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் விஜய் டிவி சீரியல்கள் நல்ல டிஆர்பி பார்த்து வந்தன.

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி சமீப காலமாக சீரியலிலும் தங்களது நிர்வாகத் திறமையை காட்டி வருகின்றனர். பழைய கதையாக இருந்தாலும் அதை புதிய வகையில் மாற்றி பெண்களை கவர்ந்து வருகின்றனர்.

மற்ற சேனல்களில் காட்டிலும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் நன்றாக இருப்பதாகவே தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல்தான் அன்புடன் குஷி.

இந்த சீரியலுக்கு தாய்மார்களின் ஆதரவு குவிந்த நிலையில் தற்போது திடீரென இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்ட இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே கைவிடப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அன்புடன் குஷி சீரியலை மொத்தமாக விஜய் டிவி முழுக்கு போட நினைப்பது தாய்மார்கள் மத்தியில் சோகத்தை கொடுத்துள்ளது. நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியலை ஏன் நிறுத்துகிறார்கள் என்ற காரணத்தை தற்போதுவரை விஜய் டிவி வெளிவிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.