வடிவேலுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை, வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கவுண்டமணி செந்தில் என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டவர்.

இவருடைய தனித்துவமான காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு கட்டத்தில் நம்பர்-1 காமெடி நடிகராக வலம்வந்தார். அந்த கால கட்டங்களில் வடிவேலுவுக்காகவே தியேட்டருக்கு மக்கள் படை எடுத்துச் செல்வார்கள்.

வடிவேலுவின் காமெடி காட்சிகளுக்கு மட்டுமே ஓடிய பல படங்கள் உண்டு. வடிவேலு தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

ஆனால் தற்போதும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் அடம்பிடிப்பது தான் அவரது மார்க்கெட்டை பதம் பார்த்துள்ளது. வடிவேலு காமெடி நடிகராக இருக்கும் போதே அவருக்கு என படங்களில் பாடல்கள் வைப்பார்கள்.

அப்படி வடிவேலு ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் போது அவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததை நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள் கண்டுபிடித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

முன்னணி நடிகர்களுக்கு லிப் கிஸ் கொடுக்க நடிகைகள் தயங்கும் நிலையில் ஒரு காமெடி நடிகருடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாட ஒத்துக் கொண்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அந்த நடிகை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் வலம் வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.