உதட்டு முத்தம், எல்லை மீறும் படுக்கையறை காட்சிகள் என கலக்கும் டப்ஸி

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெள்ளாவி நாயகியாக பிரபலமானவர் டாப்சி(tapsee). அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் பிரதான கதாநாயகி இவர்தான்.

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிகம் நடித்து வருகிறாரோ அதே போல் தான் பாலிவுட்டில் டாப்ஸிக்கு அப்படி பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் டாப்ஸி நடித்துள்ள ஹசின் தில்ரூபா என்ற படம் வெளியாக உள்ளது.

இதனால் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் டாப்சி சக நடிகருடன் எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் உதட்டு முத்தம், கிளாமர் என அனைத்திலும் இறங்கி அடித்துள்ளார்.

இந்த டீசர் தற்போது இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவி வருகிறது. மேலும் டாப்சி நடிப்பில் தமிழில் அடுத்ததாக அனபெல் சுப்பிரமணியம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி.