அரசியல்வாதி ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்த சுகன்யா, இதுதான் அவரது வாழ்க்கையை மாற்றியதா?

சுகன்யா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் தொப்புளில் பம்பரம் விடுவது தான். கிளாமராக நடித்தாலும் திறமையான கதாபாத்திரங்களிலும் நடிக்க தவறவில்லை.

அன்றைய கால இளைஞர்களுக்கு சுகன்யா என்றாலே ஒரு பிரம்மை பிடித்தது போல தான். நம்ம வீட்டு பொண்ணு என்பது போன்ற தோற்றத்தில் ஈஸியாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார்.

சுகன்யா 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த அடுத்த வருடமே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். கருத்து வேறுபாடு தான் என்றாலும் எந்த மாதிரியான பிரச்சனை என்பது தற்போது வரை வெளிவராமல் இருந்தது.

ஆனால் சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் வசம் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.

எப்போதுமே சினிமாவின் உண்மை தன்மையை வெளிப்படையாக கூறுபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சராக இருந்த ஒருவர் சுகன்யாவை அரவணைப்பில் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். அந்த அரசியல்வாதியின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.

ஒருவேளை இதன் காரணமாகத்தான் அவருடைய கணவருக்கும் சுகன்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம். 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு தற்போது வரை சுகன்யா திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவருக்கு இப்போது 51 வயது ஆகிறது.