பிரபல நடிகையை பற்றி பேசி வசமாக சிக்கிகொண்ட சின்மயி, அப்படி என்ன பேசினார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. இவர் ஏற்கனவே பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடல்கள் பாடி பிரபலமடைந்தது விட அவ்வப்போது திரைப்படங்களை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து பிரபலமானது தான் அதிகம்.

அந்த மாதிரி பல பிரபலங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் பிரபலங்களின் கேவலமான செயல்களை பற்றி சின்மயி சொல்வது உண்மை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இருந்தும் அந்த திரைப் பிரபலங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் கூட சின்மயி பா .லி .ய .ல் தொ ல் லை செய்ததாக வைரமுத்து பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு வைரமுத்து அந்த விமர்சனத்திற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மறைமுகமாக இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சின்மயி பொறுத்தவரை எப்போதும் தனது மனதிற்கு பட்டதை வெளிப்படையாக கூறுபவர். அந்த மாதிரி சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் எனும் வெப் சீரியஸில் சமந்தாவின் நடிப்பை பார்த்து வியந்ததாகவும் இவரு உண்மையிலேயே ஒரு ராக்ஸ்டார் எனவும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சமந்தாவை மீது தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் ஈழத்தமிழர்களை கொச்சை படுத்தியதாக கூறி சமந்தா மீது கடும் கோபத்தில் இருந்தனர். தற்போது சின்மயி சமந்தாவின் நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளதால் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சின்மயியை க டு மை யாக சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.

இதனால் கோபமடைந்த சின்மயி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கோபம் கலந்த வெறுப்புடன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்குத் தெரிந்த ஒரு நபரின் நடிப்பை பற்றி நான் புகழ்ந்து பேசுகிறேன். ஒரு நபரை புகழ்ந்து பேசுவதற்கு உரிமை இல்லையா மேலும் என்னை தனியாக விடுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக்கூடாது என அதில் பதிவிட்டுள்ளார்.

தற்போது ஒரு சில ரசிகர்கள் சின்மயி சொல்வது சரியாக இருந்தாலும் தீ ஃபேமிலி மேன் வெப் சீரியல் சமந்தா நடித்துள்ளது தவறுதான் எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.