நான்காவது திருமணம், மாலைதீவில் ஹனிமூன் சென்ற வனிதா, விளக்கம் அளிக்க போய் ரசிகர்களிடம் சிக்கிய நடிகை

சினிமா குடும்பத்திலிருந்து பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். இவருக்கு கிட்டத்தட்ட 3 திருமணங்கள் முறைப்படி நடந்துள்ளது. இதற்கு இடையில் நடன இயக்குனர் ராபர்ட் உடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த போது அதுவும் முடிவுக்கு வந்தது.

கடைசியாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அவர் ஒரு பெரிய குடிகாரன் என்று தெரிந்து, வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டார்.

தற்போது கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், மாலதிவில் ஹனிமூன் என்ற செய்திகள் பரவலாக பேசப்பட்டது. அவர்தான் 4வது கணவர் என்றும் அவர்களின் குடும்ப முறைப்படி திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இது உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதாவது நான் சிங்கிள் மற்றும் அவைலபில், அப்படியே இருக்கிறேன் எந்த வதந்திகளையும் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்பது போன்ற பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து நெட்டிசன்கள் சிங்கிள் மட்டும் சொன்னால் போதாதா அது என்ன அவைலபில் அப்படி என்றால் யார் நாளும் அப்ரோச் பண்ணலாமா என்பது போன்று கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். இப்படி 3 திருமணங்கள் முடிந்தும் 4வது திருமணத்திற்கு அடி போடுகிறீர்களா என்றும் நெட்டிசன்கள் கிழித்தெறிந்து வருகின்றனர்.