உலர் திராட்சையில் மருத்துவ குணம் இவ்வளவு இருக்கா..?

எங்கள் உடலில் உள்ள நோய்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு இயற்கையே பல வழிமுறைகளை தந்துள்ளது.அவ்வாறு பல வகையான உணவுகள் நோய்களை தீர்க்கு சிறந்த ஆற்றல் படைத்ததாக காணப்படுகிறது.அந்த வகையில் உலர் திராட்சையும் ஒரு முக்கிய பங்கி வகிக்கின்றது.உலர் திராட்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. குறிப்பாக இவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல மிகவும் இன்றியமையாத சத்தாகும். மேலும் உலர் திராட்சையில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் போரான் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.மேலும்,

01.உலர் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இவை சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன.

02.உலர் திராட்சை செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.

03.கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் கார்போஹைட்ரேட்டுகள் ஜீரணிப்பதை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

04.உலர் திராட்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடையை குறைக்க உதவுகிறது.

05.உலர் திராட்சையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற தாவர வகை கலவைகள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

06.உலர் திராட்சையில் போரான் என்னும் கனிமச்சத்து வளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆனால் உலர் திராட்சையை அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *