சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தாய் மீது தாக்குதல்..!! நடந்தது என்ன..?

யாழ்.சிறைச்சாலையில் மகனுக்கு பீடி கொண்டு வந்த தாயொருவர் சிறைச்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறையில் இருக்கும் மகனைப் பார்க்க வந்த ஒரு வயதான தாய், அறியாமையால், மகனுக்குக் கொடுக்க‌ பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து யாழ்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்கப்பட்டுள்ள தாயும் மகனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே சம்பவம் தொடர்பில் தாக்கப்பட்ட வயோதிப பெண்ணின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *