பொலிஸாரிடம் முன்னாள் காதலனை சிக்கவைக்க தாதியர் செய்த மோசமான செயல்..!! இறுதியில் தாதியருக்கு ஏற்பட்ட சிக்கல்..!

பொலிஸாரிடம் தனது முன்னாள் காதலனை சிக்கவைக்க முயற்சித்த இளம் தாதி மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் இடம் பெற்றுள்ளது. தாதி ஒருவர் தனது பெற்றோருடன் சென்று, முன்னாள் காதலர்கள் குழு ஒன்று தம்மை வந்து தாக்கி தமது தங்க நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.

எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு செய்த தாதி, அவரது தாய், தந்தை மற்றும் தாதியின் உறவினரான பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி தாதி அணிந்திருந்த சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான வளையல் மற்றும் தங்க நகைகள் என்பன அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாதி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று, முன்னாள் காதலன் தன்னை தாக்கி தங்கத்தை அபகரித்து சென்றுவிட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.எனினும் குறித்த யுவதியிடமும் ஏனையவர்களிடமும் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வாக்குமூலங்கள் பொய்யானது என்பதை சில நிமிடங்களிலேயே உணர்ந்துள்ளனர்.முன்னாள் காதலனை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காகவே அவ்வாறு செய்ததாக தெரியவந்த நிலையில் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *