கொள்ளையர்களின் மோசமான செயல்..!! வீட்டிலிருந்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!

பெண் ஒருவரின் சடலம் ஒன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்து வெலிகம, ரஜகல, பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.நேற்று (06) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலமானது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்ததுடன், இருவரும் வீட்டில் இல்லாதபோதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *