29 May, 2023

வெளியே சென்ற அசல், செல்லும்போது கூட பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சி, கதறி அழுத நிவா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரத்தில் சாந்தி மக்களால் வெளியேற்றப்பட்டார்.

பின்ப மூன்றாவது வாரம் அசல் அசீம் இருவருக்குமிடையே இறுதியாக வந்த கமல் அசலை வெளியேற்றினார். தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் மிகவும் முகம்சுழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டதுடன், அசலும் பெண் போட்டியாளர்களிடம் அதிக சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

நேற்றைய தினத்தில் அசல் நான் என்ன செய்தேன் இங்க வந்து உட்கார வச்சிருக்காங்க…. என்று கமலிடம் கேள்வி கேட்டார். அசீம் நான் இந்த வாரம் தவறு செய்திருக்கிறேன் மக்களின் விருப்பம் என்னவோ அதை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

நிவாஷினியிடம் கேட்கையில் அசல் இருப்பாரு…. இருக்கனும் என்று கூறினார். ஆனால் நிவாஷினி கூறிய சில நிமிடங்களில் கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறி அசல் வெளியேறுவதாக கார்டை காட்டினார்.

உடனே நிவாஷினி உடைந்து அழ தொடங்கினார். அவரை தேற்றிய அசல், ‘பாத்துக்கலாம்.. அப்படி இப்படி இருக்கணும்னு தோனுச்சுனா சீக்கிரமா வெளில வா’ என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வெளியே செல்லும் நிவாஷினியை விடாமல் இறுக்க கட்டிப்பிடித்ததையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருவதுடன், செல்லும் போது நிவாஷினியிடம் என்ன அர்த்தத்தில் அசல் கூறினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Share