21 March, 2023

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாராம் வெளியேறபோகும் அந்த 2 போட்டியாளர்கள் யார் தெரியுமா?

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தமிழில் நடந்து முடிந்த 5 சீசன்களை காட்டிலும் தற்போதைய சீசனில் ஒவ்வொரு வாரமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.

வார இறுதியில் கமலுக்கு மிக நேரடியாகவே தவறுகளை சுட்டிக்காட்டுவதால் அவரின் வருகைக்காகவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேறுவார் என்பது தெரியும்.

ஆனால் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. இந்த வாரம் கதிரவன், ஜனனி, ரக்ஷிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற மைனா மற்றும் குயின்ஸி வெளியேற்றப்படலாம் என தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே மைனாவின் நடவடிக்கைகள் சரியில்லை என ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share