பொலிஸ் உத்தியோகத்தரின் கொடூர செயல்..!! பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் பூசகர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய குற்றத்திற்காக கலென்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம் பெற்றுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இருவரும் மேற்படி தேவாலயத்திற்குச் சென்று அங்கு இருந்த பூஷகரை வந்து பூஜை ஒன்று நடத்துமாறு கூறியுள்ளனர்.இந்நிலையில், குறித்த பூசகர. பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் சந்தேக நபர்கள் இருவரும் அவரையும் அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது, ​​அங்கிருந்த‌ பொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *