30 March, 2023

மனைவியை படிக்க கனடா அனுப்பிய கணவன், கனவுகளை உடைத்து ஏமாற்றிய பெண்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பம்மிபுராவை சேர்ந்தவர் மந்தீப் சிங். இவருக்கும் ககந்தீப் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது.

ககந்தீப்பின் படிப்பு விசாவுக்கான செலவுகளை மந்தீப் ஏற்றுக்கொண்டால், திருமணத்திற்குப் பிறகு spouse விசாவில் கனடாவுக்கு அவரை அழைத்து செல்ல உதவுவதாக குடும்பத்தார் உறுதியளித்தனர்.

இதையடுத்து கல்லூரி கட்டணம், விமான கட்டணம், விசா கட்டணம் மற்றும் இதர செலவுகள் என ரூ. 39.57 லட்சம் செலவு செய்து மனைவியை மந்தீப் கனடாவுக்கு அனுப்பினார்.

கனடாவில் இருந்து இடையில் சொந்த ஊருக்கு வருவேன் என தெரிவித்துவிட்டு கிளம்பிய ககந்தீப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி திரும்பி வரவே இல்லை.

இறுதியில், கணவரின் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் நிராகரித்தார். இதையடுத்து மந்தீப், ககந்தீப் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, ​​அவர்கள் திரும்ப தர மறுத்துவிட்டனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், செப்டம்பர் 8, 2022 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விடயத்தை விசாரித்த பிறகு, பொலிசார் ககந்தீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share