21 March, 2023

என்னால் தான் அந்த பெண் இறந்தாள், அதிர்ச்சியில் இருந்து மீளாத கனடா நபர்

மொண்டீரியல் பொலிசார் இது குறித்து கூறுகையில், குறித்த பெண் நேற்று காலை 7 மணியளவில் ப்ளேஸ் டு காமர்ஸ் சந்திப்பில் ஒரு பஸ்ஸுக்கு முன்னால் சென்று தெருவைக் கடக்கும்போது, ​​16 மீட்டர் நீளமுள்ள போக்குவரத்து டிரக் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அப்பெண் உயிரிழந்தார். டிரக்கை ஓட்டிச் சென்ற 30 வயதுடைய ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தியதாகவும், ஓட்டிச் செல்லும் போது அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

மேலும் இச்சம்பவம் காரணமாக ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share