தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு..!! பொலிஸார் தெரிவிப்பு..!

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பண வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 500,000 ரூபா வரை வெகுமதியாக வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *