விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனப்பெண்..!!

சீனப்பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பேருவளையில் பதிவாகியுள்ளது.குறித்த சீனப்பெண் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நிலையில் கிடைக்கப் பெற்ற தகவலின் படி விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே குறித்த சீனப்பெண் தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன் காரணமாக குறித்த பெண் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளார் என பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடு ஒன்றில் சீனப் பெண்ணொருவர் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.இதன்போதே அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *