சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்..!! அதிகாரிகள் கொடுத்த‌ கண்டிஷன்..!

பல நாடுகளில் உள்ள உணவுகளை அங்கு போய் சென்று சுவைத்து அது எப்படி இருக்கிறது என மக்களுக்கு எதார்த்தமான எளிமையான பேச்சாலும் விளக்குவபவர் புட் ரிவியூர் இர்பான்.குறிப்பாக நாம் சாப்பிட தயங்கும் உணவுகளான பாம்பு கறி, பூரான் உள்ளிட்டவற்றையெல்லாம் சுவைத்து சாப்பிட்டு அது எப்படி இருக்கிறது என கூறி நம்ம ஊர் மக்கள் பல பேர் முகம் சுளிக்க வைத்ததன் மூலமாகவும் பிரபலமானவர் இர்பான்.

அவரது யூடியூப் சேனல் மூலம் மாத வருமானமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவர் தனது சொந்த வீடு, பல சொகுசு கார்கள், ஒரு பங்களா வீடு போன்றவற்றை வாங்கி, மிக உயர்ந்த நட்சத்திர அந்தஸ்துக்கு குறுகிய காலத்தில் உயர்ந்தார்.தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கலக்கி வருகிறார் இர்பான்.இந் நிலையில் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என வெளிநாட்டில் டெஸ்ட் செய்து அதை எல்லோருக்கும் அறிவித்து இருந்தார்.இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சர்ச்சையில் சிக்கியதும் அந்த வீடியோவை நீக்கிவிட்டு இர்பான், அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதமும் கொடுத்து இருக்கிறார்.அவர் நேரில் வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தபோது, ​​அதிகாரிகள் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிடவேண்டும் என அவர்கள் கண்டிஷன் போட்டு இருக்கிறார்களாம்.இது தற்போது சமூக வலைத் தளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *