நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் மரணம்..!!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நீண்ட நாட்களுக்கு பின் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், PCR பரிசோதனையில் அவர் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக உயிரிழந்த நபர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *