மாணவர்கள் மீது வாள் வெட்டு..!!சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரம்..!!

இரு மாணவர்கள் வீதியில் பயணித்து கொண்டிருக்கும் போது அடயாளம் தெரியாத நபர்களால் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நடைபெற்றுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை (20/02/2024/) மாலை குறித்த வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில்மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *