வயல் ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலம்..!!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேச வயல் ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.ரம்பொட, நாவலதென்னவத்தை பகுதிகளைச்சேர்ந்த 18 மற்றும் 29 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌியே சென்ற நிலையில் மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *