கனடா ஆசையால் பறிபோகும் பணம்..!!ஏமாந்து நிற்கும் மக்கள்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடா செல்லவிரும்பும் ஆசையில் யாணப்பணத்தை சேர்ந்த குறித்த நபர் பணத்தை செலுத்தி நீண்ட நாட்களாகியும் தனது பயண ஏற்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறான மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *