பிக் பாஸ்கட்டிலிருந்து தேவையான மாதாந்த பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கமான வாடிக்கையாளரொருவருக்கு பா-லி-ய-ல் தொ-ல்-லை செய்ய முயன்ற நபர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
கடந்த 5ம் திகதி குறித்த பெண் பிக் பாஸ்கட்டில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
அதனால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தினையும் அவரின் தோழி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சீண்டலுக்கு ஆளான பெண்!
குறித்த பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 5ம் திகதி பிக் பாஸ்கட்டில் பொருள் டெலிவரி செய்ய Delivery Boy வந்துள்ளார்.
இவர் அவரிடம் பொருட்களை ஹாலிலுள்ள சோபாவில் வைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.
அவர் அதனை பொருட்படுத்தாமல் சமையலறைக்கு வந்துள்ளார் .
அத்தோடு அப்பெண் சரி கிளம்புங்கள் எனக்கூற, அவரை தோள்களை பற்றி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இந்த பெண் சத்தம் போட்டு வெளியே செல்லுங்கள் சிசிடிவி இருக்கிறது என கூறியுள்ளார்.
அதற்கு அவரோ உங்களின் தொலைப்பேசி இலக்கத்தை தாருங்கள் சென்றுவிடுகிறேன் என மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
இதனை தனது தோழியிடம் கூறி பொலிஸாருக்கு தகவல் கொடுக்க கூறியவுடன் குறித்த நபர் சிரித்துக்கொண்டே வெளியே சென்றுள்ளார்.
பிக் பாஸ்கட்டில் முறையீடு! ரீ ட்வீட் செய்த சின்மயி!!
இது தொடர்பில் பிக் பாஸ்கட்டில் முறையிட்ட போது, அதனை அவர்கள் கருத்தில் கொள்ளாது அவரின் விவரங்களை தர மறுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் பொலிஸிடம் இது பற்றி கூற வேண்டாம், சமூக வலைத்தளங்களிலும் பகிராதீர்கள் என கூறியுள்ளனர்.
ஆனாலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு இப்பெண்கள் இருவரும் முறையிட்டுள்ளனர்.
மேலும் பிக் பாஸ்கட் நிறுவனம் மீது புகாரளித்து பெண்கள் இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் எனவும் குறித்த பெண்ணின் தோழி மேலும் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.