தொடரும் மழை காரணமாக அதிகரித்து வரும் நோய்..!!இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..!

தொடர் மழையினால் வயிற்றுப்போக்கு நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே எதிர்வரும் வெசாக் பண்டிகையை கருத்திற் கொண்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வெசாக் பண்டிகைக்கு தானம் வழங்கப்படும் விகாரைகள் முதல் நாள் வரை பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானம் வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *