ஸ்டார்லிங் இணைய சேவையை பெற இலங்கையில் இவ்வளவு தொகை செலுத்த வேண்டுமா..!!

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய  சேவைகள் ஆரம்பித்த பின்பு குறித்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கை மக்கள் சுமார் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மாதகட்டணமாக 99 டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு, இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது.

நாட்டில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *