யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குறித்து வெளிவரும் பொய்யான குற்றசாட்டுக்கள்..!! இதனால் பாதிப்படைவது ஏழை நோயாளிகளே..கவலையில் வைத்தியர்..!

அண்மைக்காலமாக யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் சில இணையத்தளங்களிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.இது நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என‌ யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (06-05-2024) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மருத்துவமனையில் தினசரி நடக்கும் சம்பவங்களை இணையதளங்களில் நேரடியாக வெளியிட்டால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நம்பிக்கை குறைகிறது.இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை நோயாளிகளேயாகும்.

இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நாம் கருதுகிறோம்.நாளாந்தம் வைத்தியசாலையில் ஒழுக்க நெறிகளை நாங்கள் பாதுகாத்து வருகின்றோம்.நாளாந்தம் எத்தனை நோயாளிகள் வருகின்றார், இறக்கின்றார்கள் என்பதை பதிவிடுகின்றோம்.எல்லாவற்றிற்கும் மேலாக, நாளந்தம் 8 முதல் 10 நோயாளிகள் இறக்கின்றனர்.அவர்களின் இறப்புக்கான காரணம் எல்லாவற்றையும் மருத்துவ அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *