வெப்பத்தால் உயிரை விட்ட விவசாயி..!! திருகோணமலையில் சோக சம்பவம்..!

நேற்றய தினம் சனிக்கிழமை (20) அன்று மூதூர் – பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்டுத்தியுள்ளது.3 பிள்ளைகளின் தந்தையான மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்து வந்த சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலில் இன்றைய தினம் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்தவரை உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில், வெயிலில் இருப்பவர்கள், வயலில் வேலை செய்பவர்கள், அதிக சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் வேலைகளை செய்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *