மகனின் O/L பரீட்சைக்காக தாயின் மரணத்தை மறைத்த தந்தை..!!

தந்தை ஒருவர் தனது மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த சம்பவம் ஒன்று காலி பகுத்தியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.குறித்த தாய் கடந்த 12ம் திகதி குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.

அப்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.தாய் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிய இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அதனை மறைத்துள்ளனர்.

இந்நிலையில், மகனின் பரீட்சை நிறைவடையும் வரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம், நேற்று காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *