மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை தப்பியோட்டம்..!! தென்னிலங்கையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

தந்தை ஒருவர் தனது மகனை தூப்பாக்கியால் சுட்ட நிலையில் காயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது சூரியவெவ வெவேகம பகுதியில் இடம் பெற்றுள்ளதா பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மது போதையில் இருந்த தந்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன் மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தப்பியோடிய தந்தையை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *