வேட்டையாடு விளையாடு திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி மரணம்..!! சோகத்தில் திரை உலகம்..!

தென்னிந்திய திரையுலகில் மறக்க முடியாத வில்லனாக வலம் வந்த டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் உயிரிழந்துள்ளார்.குறித்த தகவல் ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் தனுஷின் பொல்லாதவன் நடிகர் சூர்யாவின் காக்க காக்க நடிகர் விஜயின் பைரவா, பிகில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை உதவிக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் டேனியல் பாலாஜி.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.இவரின் குரலுக்கு அதிகளவு ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது . இளம் வயதிலேயே அவரது திடீர் மரணம் அதிர்ச்சி அளிப்பதோடு, தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டதாக ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *