29 May, 2023

நடைமுறைக்கு வந்த உணவு விலைக்குறைப்பு, விசேட சட்ட நடவடிக்கைக்கு தயார்

நேற்று நள்ளிரவு முதல் பல உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறிப்பிட்ட உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவை வழங்குகின்றனவா என்பதை சரிபார்க்க இந்த சோதனை நடத்தப்படுகிறது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கும் அனைத்து நுகர்வோருக்கும் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் சோற்றுப் பொதி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலைகளை 20 வீதத்தால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share