பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவுப்பார்சல்..!!

உணவுப் பார்சலில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பருக்கு உணவு கொண்டு சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.43 வயதுடைய அனுராதபுரம் ஜயசிறிபுர பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *