முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம்..!!

முதன்முறையாக பிரசவத்தின்போது பிரசவ அறையில் தந்தைமார்களையும் அனுமதிக்க அரச வைத்தியசாலைகள் வாய்ப்பளித்துள்ளன.இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்குள் தந்தையை செல்ல அனுமதிக்கும் புதிய திட்டம் வைத்தியசாலையில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்ற செயல்கள் மூலம் பெண்கள் நல்ல மனநிலையுடன் குழந்தைகளை பெற்றெடுப்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *