விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டு பெண்..!!

வெளிநாட்டுப் பெண் ஒருவர் 7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றய தினம் (20.05.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச்சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு 57 வயதுடை பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (20) காலை 9.45 மணியளவில் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன் போது அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெராயினை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *