29 May, 2023

கனடா நாட்டில் இப்படியும் மோசடி நடக்கிறது, அவதானமாக இருக்கவும்

பீட்சா விநியோக சாரதி
சமீபத்தில் நோர்த் யோர்க் பகுதியில் பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.

அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் Debit Card-யை வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 டொலர் பணம் பீட்சாவிற்காக கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த தொகையை Debit Card-யின் மூலம் குறித்த பெண்ணை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

அதற்கான பணத்தை வழங்குவதாக கூறி இவ்வாறு Debit Card மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த Debit Card-யே மற்றும் ஒரு அட்டையுடன் இணைத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு இளைஞர்களே ஈடுபட்டதாக முறைப்பாடு
இந்த மோசடியில் சுமார் 20 தொடக்கம் 25 வயது உடைய இரண்டு இளைஞர்களே ஈடுபட்டதாக குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, மிஸ்ஸிசாகுவா பகுதியில் பீட்சா விநியோக சாரதி ஒருவர் பெண் ஒருவரிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பீட்சா விநியோக சாரதி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த நபர் பெண்ணிடமிருந்து 2400 டொலர்களை மோசடி செய்துள்ளார்.

பீட்சா விநியோகம் செய்யும் சாரதி பணத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் இதனால் அட்டை மூல கொடுப்பனவு செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி பெண்ணிடமிருந்து அட்டையைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடன் அட்டையில் செலுத்தப்படும் பணத்திற்கு தொகைக்கு நிகரான பணத்தை வழங்குவதாக ஒப்புதல் அளித்து அட்டையை பெற்றுக் கொண்டு இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இலங்கையர்களும் எச்சரிக்கை
இவ்வாறான நிலையில் எந்த ஒரு சந்தரப்பத்திலும் மக்கள் கடன் அட்டையோ அல்லது டெபிட் அட்டையேயோ வேறும் நபர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும், வேறு ஒருவர் இயந்திரத்தில் அதனை உள்ளீடு செய்யவோ ஸ்வெப் செய்யவோ அனுமதிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மோசடிகளில் இருந்து கனடாவில் வாழும் இலங்கையர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Share