டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர்களில் மிகமுக்கியமானவர் ஜி.பி.முத்து. அதன் பின் அந்த செயலியை தடை செய்த பிறகு யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஜி.பி முத்து.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து
இதன் மூலம் பிரபலமான ஜி.பி முத்துவிற்கு கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் வாரத்திலேயே ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனக்கு பணம், புகழை விட தன் மகன்தான் முக்கியம் என்றும், அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் என்னை தேடுவான். அதனால நான் போயே ஆகணும் என்று ஜி.பி.முத்து உறுதியாக கூறினார். இதனையடுத்து, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜி.பி முத்து பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜி.பி முத்து ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் பேசுகையில்,
சில வருடங்களுக்கு முன்பு நானும் என் சகோதரரும் ஒரு இடத்தில வேலை பார்த்து வந்தோம்.
அப்போது எங்களுக்குள் சிறு பிரச்சனை ஏற்பட்டது. அந்த சண்டையில் கோபமடைந்த என் சகோதரர் என்னை பிளேடில் சரமாரியாக வெட்டினார். இதனால், ரத்த வெள்ளத்தில் நான் சரிந்து கீழே விழுந்தேன். கீழே விழுந்த கிடந்த என்னை நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றினர்.
என் உடலில் மொத்தம் 175 தையல் எனக்கு போடப்பட்டது. ஆனால் இப்போது என் சகோதரர் உயிருடன் இல்லை. அவர் வெட்டிய வலியை விட அவர் என் கூட இல்லையே என்றே வலி தான் அதிகமாக இருக்கிறார் என்றார். இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஜி.பி.முத்து ரசிகர்கள் பதறிப்போனார்கள்.